யார் சேர முடியும்?

கொலராடோ தமிழ்ச் சங்கம் (TAC) கொலராடோவில் தமிழ் பேசும் சமூகத்தை ஒன்றிணைத்து வளர்ப்பதற்கு அர்ப்பணித்துள்ளது. நீங்கள் துடிப்பான தமிழ் சமூகத்தின் ஒரு பகுதியாக மாற விரும்பினால், TAC இல் சேர உங்களை அழைக்கிறோம். https://tamilcolorado.org/

குறிஞ்சி உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் TAC உறுப்பினர்களாக உள்ளனர், குறிஞ்சி தன்னார்வத் தலைவர்களில் சிலர் TAC நிர்வாகக் குழுவில் பதவிகளை வகிக்கின்றனர்.

இனிவரும் தலைமுறையினருக்கு, குறிப்பாகச் சிறுவர் சிறுமியரிடம் தமிழ் மொழியையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் கற்பித்து, நிலைபெறச் செய்ய விரும்பும், இங்கு வாழும் தமிழ்ச் சமூகத்தினரை இப்பணியில் ஈடுபடுத்தக் குறிஞ்சி முத்தமிழ்ச் சங்கம் பெருமுயற்சி எடுத்து வருகிறது .

குறிஞ்சி முத்தமிழ்ச் சங்கத்தின் குறிக்கோள்களை ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயல்படுத்த விரும்பும், மற்றும் தமிழ்மொழி, தமிழ்க் கலாச்சாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட கொலராடோ வாழ் தமிழ்ச் சமூகத்தினர் மட்டுமே குறிஞ்சி முத்தமிழ்ச் சங்கத்தில் தனிநபர் உறுப்பினராக சேர அழைக்கின்றோம்!

18 வயதுக்கு உட்பட்ட உறுப்பினராக விரும்பும் குழந்தைகள், ஒரு பள்ளியில் தமிழ்க் கல்வித் திட்ட்டங்களில் (மெய்நிகர்/ online , நேரில் / in person , அல்லது இரண்டு வகையிலும் /hybrid)அல்லது தனியார் பயிற்சி தமிழ்ப் படித்துக் கொண்டிருக்க வேண்டும். அல்லது 8ஆம் வகுப்பு வரை தமிழ்ப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.